படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு - நடிப்பை நிறுத்திய நடிகை!

படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு - நடிப்பை நிறுத்திய நடிகை!
நடிகை மஞ்சரி பட்நிஸ்
  • Share this:
படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் வாய்ப்பு தருவோம் என்று கூறியதால் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டதாக நடிகை மஞ்சரி பட்நிஸ் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், கோலிவுட் வரை நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை #METOO என்ற இயக்கத்தின் மூலம் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகை மஞ்சரி பட்நிஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சினா இஜிகா நாம் ஹேய், பரோட் ஹவுஸ் உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்திருந்த மஞ்சரி பட்நிஸ் கடைசியாக சக்தி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இதுகுறித்து பேட்டி அளித்திருக்கும் அவர், நான் ஜுனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து கடைசியாக நடித்த படம் சக்தி. அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் நடிக்கவில்லை. எனக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதற்காக இயக்குநர்கள் பலரும் அழைத்தனர். அப்படி அழைத்தவர்கள் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆசைக்கு ஒத்துழைத்தால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. சினிமாவில் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம்” என்று கூறியுள்ளார்.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்