நடிகை மனிஷா யாதவ், சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று

நடிகை மனிஷா யாதவ், சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று

மனிஷா யாதவ் | சஞ்சனா கல்ராணி

நடிகை சஞ்சனா கல்ராணி, மனிஷா யாதவ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 50 விழுக்காடு மருந்தை மாநில அரசுகளுக்கு வழங்கவும். வெளிசந்தைகளில் கொரோனா தடுப்பூசியை விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான பெங்களூரைச் சேர்ந்த சஞ்சனா கல்ராணி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துளார். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்த மனிஷா யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு சில சமயங்களில் மட்டும் மூச்சுத் திணறுகிறது. கொரோனா வராமல் தவிர்ப்பதுதான் நல்லது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: