Thalapathy Vijay: ’விஜய்யுடன் டான்ஸ் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்’ - நடிகை ஓபன் டாக்

வாத்தி கம்மிங் பாடல்

சென்னையில் விஜய் ரித்திக் ரோஷன் மாதிரி. அவருடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன்.

  • Share this:
    விஜய்யுடன் நடனமாடும் போது தான் கர்ப்பமாக இருந்ததாக நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.

    சுந்தர் சி இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளியான 'உன்னை தேடி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மாளவிகா அறிமுகமானார். அதன் பிறகு, 'ஆனந்த பூங்காற்றே', 'ரோஜா வனம்', 'வெற்றி கொடி கட்டு', 'பேரழகன்', ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ மற்றும் ’சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.



    அதோடு இயக்குநர் மிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் "வள மீனுக்கு" என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி, தனது அழகிய நகர்வுகள் மற்றும் அழகால் ரசிகர்களின் இதயங்களை வென்றார். இவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை கடந்த 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.



    மாளவிகா இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார், மேலும் தனது படங்களை வெளியிட்டு, என்ன நடக்கிறது என்பது குறித்தும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

    அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். “சென்னையில் விஜய் ரித்திக் ரோஷன் மாதிரி. அவருடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருப்பேன்” என அந்த நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார் மாளவிகா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: