ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாளவிகா மோகனன்!

சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

சிலம்பம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்கால ஆயுத அடிப்படையிலான தற்காப்புக் கலையாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை மாளவிகா மோகனன் தான் சிலம்பம் கற்றுக் கொள்ளும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்திலும், தனுஷுடன் 'மாறன்' படத்திலும் நடித்தார். ஃபிட்னஸ் பிரியரான இவர் வனவிலங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அந்தப் படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாளவிகா மோகனன் சிலம்பம் மீது காதல் கொண்டதாகத் தெரிகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். அதை பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன், "சிலம்பம் என்ற அற்புதமான உலகில் குழந்தையாக அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கலையை ஆழமாகக் கற்றுக் கொள்ளும் வரை காத்திருக்க முடியவில்லை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ரன்வீர் சிங்கை பார்க்க வைத்து கேக் சாப்பிட்ட பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ

சிலம்பம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்கால ஆயுத அடிப்படையிலான தற்காப்புக் கலையாகும். இது உலகின் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாக சிறப்புப் பெற்றுள்ளது. சிலம்பம் என்ற சொல் விளையாட்டைப் பற்றிய ஒரு பொருளைக் கொண்டுள்ளது. சிலம் என்பது 'மலை' மற்றும் பம் என்பது மூங்கிலைக் குறிக்கிறது. இந்த தற்காப்புக் கலையில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படும் மூங்கில் குச்சியை இது உணர்த்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malavika Mohanan