Thalapathy Vijay: விஜய் பட ஹீரோயினா இது? வைரலாகும் படம்!

மாளவிகா மோகனன்

அவரது கமெண்ட் பாக்ஸ் அழகான கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது.

  • Share this:
    மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் குழந்தைப்பருவ படம் சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது.

    நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் "மாஸ்டர்" படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். டஸ்கி ஸ்கின், க்யூட் நடிப்பு என அதிக ரசிகர்களையும் பெற்றார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தனது கவர்ச்சியான படங்களை அடிக்கடி பகிர்ந்துக் கொள்கிறார்.

    இந்நிலையில் தான் ஒரு ஃபேன்சி ட்ரெஸ் போட்டியில் கலந்துக் கொண்ட குழந்தை பருவ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது கமெண்ட் பாக்ஸ் அழகான கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)






    மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா இப்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். அந்தந்த மொழிகளில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மாஸ்டரின் வெற்றிக்குப் பிறகு, தனுஷுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார் மாளவிகா. அதன் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: