மதுமிதா தற்கொலை முயற்சி? கையில் கட்டுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்! கமல், சேரன் அதிருப்தி

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 5:27 PM IST
மதுமிதா தற்கொலை முயற்சி? கையில் கட்டுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்! கமல், சேரன் அதிருப்தி
கமல்ஹாசன் - மதுமிதா
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 5:27 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனை சந்திக்கும் புரோமோ வெளியாகியுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 55 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பாத்திருந்த நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை வெளியேறி உள்ளார். இன்று வெளியான ப்ரொமோவில் மதுமிதா வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவின. அதை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.நடிகர் சேரனும், “ நடிகை மதுமிதாவின் இந்த செயல் தவறான எண்ணம். அவர் எடுத்த முடிவு தவறான முடிவு” என்று ஆவேசமாக சொல்கிறார். கமல்ஹாசனும் உங்களுடைய தியாகம் அஹிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்.

Loading...

என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...