முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மகனுடன் 'ஜாங்கிரி' மதுமிதா - ரசிகர்கள் வாழ்த்து

மகனுடன் 'ஜாங்கிரி' மதுமிதா - ரசிகர்கள் வாழ்த்து

மதுமிதா

மதுமிதா

மதுமிதாவிற்கு மோசல் ஜோயல் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் மதுமிதா. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மதுமிதா நடித்திருந்தார். இந்தப் படத்தில் சந்தானம் அவரை 'ஜாங்கிரி' என சந்தானம் அழைப்பார். அவரது கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பால் 'ஜாங்கிரி' மதுமிதா என அழைக்கப்படுகிறார்.

மேலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, டிமான்டி காலனி என இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார்.


ஆனால் அந்த நிகழ்ச்சியிலிருநது சர்ச்சைக்குரிய முறையில் மதுமிதா வெளியேறினார். தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதாகவும் இது பிக்பாஸ் விதியை மீறிய செயல் என்றும் கூறி அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் காட்டேரி என்ற படம் மட்டும் வெளியாகியிருந்தது. அதன் பிறகு திரைப்படங்கள் எதிலும் நடிக்காத அவர், டிவி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. மதுமிதாவிற்கு மோசல் ஜோயல் என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தனது மகளின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Instagram, Viral