ஏன் இப்படி பண்ணீங்க...? விஜய் டிவியிடம் விளக்கம் கேட்கும் மதுமிதாவின் கணவர்

news18
Updated: October 10, 2019, 1:32 PM IST
ஏன் இப்படி பண்ணீங்க...? விஜய் டிவியிடம் விளக்கம் கேட்கும் மதுமிதாவின் கணவர்
கணவருடன் பிக்பாஸ் மதுமிதா
news18
Updated: October 10, 2019, 1:32 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டதாக காட்டியது ஏன் என்று விளக்கம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுமிதாவின் கணவர்.

கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.


இறுதிநாள் கொண்டாட்டத்தில் மதுமிதா, சரவணனைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் யாஷிகாவின் நடனத்துக்குப் பிறகு மதுமிதாவின் கணவர் அமர்ந்திருப்பது போன்ற காட்சி ஒளிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதனால் மதுமிதாவின் கணவர் மட்டும் எப்படி இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கமளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மதுமிதாவின் கணவர் மோசஸ். அந்த வீடியோவில், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் நானும் எனது குடும்பத்தினரும் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் எங்களை அவர்கள் அழைக்கவில்லை.

Loading...

ஆனால் நான் இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் நான் கலந்துகொண்டது போல் ஒரு வீடியோவை காண்பித்துள்ளனர். ஏன் இப்படி செய்தார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இதை செய்திருக்கக் கூடாது. இது மிகவும் தவறு. தயவு செய்து இதற்கான விளக்கத்தை அவர்கள் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...