Madhoo: மகள்களுடனான படத்தைப் பகிர்ந்த மதுபாலா... அதற்கு ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

மதுபாலா

நடிகை மதுபாலா தனது மகள்களோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.

  • Share this:
    மணிரத்னத்தின் ’ரோஜா’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மதுபாலா தனது மகள்களுடன் இருக்கும் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    இயக்குனர் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அழகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. இதில் மம்முட்டி, பானுப்ரியா மற்றும் கீதா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து 1992-ஆம் ஆண்டில் வெளியான மணிரத்தினத்தின் “ரோஜா” படம் மதுபாலாவை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றது.

    madhubala children, madhubala daughter, madhubala sister, actress madhubala wiki, madhubala wikipedia, madhubala family, actress madhubala, actress madhoo shah, actress madhoo, madhoo instagram, keia shah, madhoo age, madhoo birthplace, madhoo family, madhoo father, madhoo mother, மதுபாலா, நடிகை மதுபாலா, மதுபாலா படங்கள், மதுபாலா குழந்தைகள், மதுபாலா ரோஜா திரைப்படம், மதுபாலா பாடல்கள், மதுபாலா தமிழ் நடிகை
    மகள்களுடன் மதுபாலா


    பின்னர் இயக்குநர் ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் 1999-ஆம் ஆண்டு மதுபாலாவுக்கு திருமணம் நடந்தது. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினரான ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அமேயா, கீயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)






    இந்நிலையில் நடிகை மதுபாலா தனது மகள்களோடு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அதோடு ஒருவேளை இயக்குநர் மணிரத்னம் ரோஜா படத்தின் 2-ம் பாகத்தை எடுத்தால், அதில் மதுபாலாவின் மகள்கள் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டுமென கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: