• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சித்தார்த், சூர்யா பட நடிகை திருமணம்!

சித்தார்த், சூர்யா பட நடிகை திருமணம்!

லிஜோமோல் திருமணம்

லிஜோமோல் திருமணம்

லிஜோமோலின் திரையுலக நண்பர்கள் பலர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது.

    சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜி.வி.பிரகாஷின் சகோதரியாகவும், சித்தார்த்துக்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றவர் நடிகை லிஜோமோல் ஜோஸ். இவர் அருண் ஆண்டனி ஒனிசெரில் என்பவரை தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் திருமணத்தில் இருவரின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் கலந்துக் கொண்டனர்.

    இந்த புதுமணத் தம்பதிகளின் திருமணத்தை போட்டோஷூட் செய்த திருமண புகைப்பட நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் லிஜோமோல் - அருண் இருவரின் திருமணச் செய்தி தெரியவந்தது. இந்தத் திருமணம் கேரளாவில் நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இவர்களது திருமணத்தின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் லிஜோமோல் ஒரு சில்வர் புடவை அணிந்து, வைர நெக் பீஸ் மற்றும் குறைந்தபட்ச மேக்கப்பில் காட்சியளிக்கிறார். அவரது கணவர் கறுப்பு உடையை அணிந்திருந்தார். இதைத் தொடர்ந்து, லிஜோமோலின் திரையுலக நண்பர்கள் பலர் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by PeppeAds ® (@peppeads)








     




    View this post on Instagram





     

    A post shared by PeppeAds ® (@peppeads)








     




    View this post on Instagram





     

    A post shared by PeppeAds ® (@peppeads)






    தவிர லிஜோமோல் தற்போது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைமில் நவம்பர் 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: