ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

₹5 லட்சம் பரிசு என வந்த மெசேஜை நம்பி சிக்கலில் மாட்டிய பிரபல சீரியல் நடிகை.... புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு விட்டதாக கண்ணீர்

₹5 லட்சம் பரிசு என வந்த மெசேஜை நம்பி சிக்கலில் மாட்டிய பிரபல சீரியல் நடிகை.... புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு விட்டதாக கண்ணீர்

நடிகை லட்சுமி வாசுதேவன்

நடிகை லட்சுமி வாசுதேவன்

நீங்கள் ரூ. 5 லட்சம் வென்று விட்டீர்கள் என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து அந்த மெசேஜில் உள்ள லிங்க்கை அவர் க்ளிக் செய்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரூ. 5 லட்சம் வென்றுவிட்டதாக வந்த மெசேஜை நம்பி பிரபல தமிழ் நடிகை லட்சுமி வாசுதேவன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ஸ்மார்ட் ஃபோனை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், ஆன்லைன் குற்றங்களும் அதிகரித்து விட்டன. மக்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களிடமே பணம் பறிக்கும் குற்றச் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக பெருகியுள்ளது.

குறிப்பாக எஸ்.எம்.எஸ். மூலம் நீங்கள் இத்தனை லட்சங்களை வென்றுள்ளீர்கள் என தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட நபர்களின் போனை ஹேக் செய்து அதன் மூலமாக பணத்தை சமூக விரோதிகள் பறித்து விடுகின்றனர்.

வெளியாவதற்கு முன்பே கோடிகளில் வசூல் செய்யும் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’!

அந்த வகையில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள், புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் இதுபோன்ற மெசேஜை நம்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் லட்சுமி வாசுதேவன். இவரது மொபைலுக்கு நீங்கள் ரூ. 5 லட்சம் வென்று விட்டீர்கள் என மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து அந்த மெசேஜில் உள்ள லிங்க்கை அவர் க்ளிக் செய்திருக்கிறார்.

இதன் பின்னர் ஒரு ஆப் தன்னாலேயே டவுண்லோட் ஆகியுள்ளது. இந்த ஆப் காரணமாக லட்சுமி வாசுதேவனின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து அவரது உருவத்தை மார்ஃபிங் செய்து ஆபாச படங்களை உருவாக்கிய நபர்கள், லட்சுமியின் வாட்ஸ்ஆப் கான்டேக்ட்ஸில் உள்ள நம்பர்களுக்கு அவரது ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிர்ந்துபோன லட்சுமி வாசுதேவன், தான் சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

Published by:Musthak
First published:

Tags: Kollywood