தனுஷ் உடன் ‘கர்ணன்' படத்தில் இணைந்த லட்சுமி பிரியா!

தனுஷ் உடன் ‘கர்ணன்' படத்தில் இணைந்த லட்சுமி பிரியா!
மாரி செல்வராஜ் உடன் லட்சுமி பிரியா
  • Share this:
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளார்.

ரிச்சி, மாயா உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை லட்சுமிப்ரியா,  குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் நடித்த லக்‌ஷ்மி குறும்படம் பல தளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் விவாதத்தையும் உருவாக்கியது.

இதையடுத்து சிகை பட இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கும் பாக்ஸி படத்தில் நாயகியாகவும், நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தான் நடித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லட்சுமி பிரியா.


கர்ணன் திரைப்படம் தனுஷின் 41-வது திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் லால், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அசுரன் படத்தைத் தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

மேலும் படிக்க : மாஸ்டருக்கு முன்பே வெளியான விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்