நான் சிங்கிள் இல்லை... ரசிகரின் கேள்விக்கு லட்சுமி மேனன் பதில்

சமூகவலைதளத்தில் தன்னிடம் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு லட்சுமி மேனன் பதிலளித்துள்ளார்.

நான் சிங்கிள் இல்லை... ரசிகரின் கேள்விக்கு லட்சுமி மேனன் பதில்
நடிகை லட்சுமி மேனன்
  • Share this:
கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் ‘றெக்க’ படத்துக்குப் பின்னர் சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் யங் மங் சங் திரைப்படம் திரைக்கு வருவதில் தாமதம் நிலவி வருகிறது.

தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் லட்சுமிமேனன், முத்தையா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவலுக்கு ஆவேசமாக பதிலளித்திருந்தார். அதேபோல் கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு நகைச்சுவையான ஸ்டிக்கர் ஒன்றை பதிவிட்டார். இந்நிலையில் நீங்கள் சிங்கிளா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் லட்சுமி மேனன்.


லட்சுமி மேனனின் இந்த பதிலால் அவரது காதலர் யார் என்று நெட்டிசன்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் அவருக்கு விரைவில் திருமணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading