Home /News /entertainment /

16 வருடங்களுக்குப் பின் சினிமாவுக்கு திரும்பிய நடிகை லைலா!

16 வருடங்களுக்குப் பின் சினிமாவுக்கு திரும்பிய நடிகை லைலா!

லைலா

லைலா

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் படத்தில் லைலா நடித்து வருகிறார்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். இந்த இரண்டையும் செய்கிறவர்கள் நடிகைகள். கல்யாணம் செய்து கணவன், குழந்தை என செட்டிலானவர்களும் சினிமாவுக்கு திரும்புவார்கள். சமீபத்திய வரவு நடிகை லைலா.

முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துக் கொண்டிருந்த லைலா, சினிமாவுக்கு முழுக்குப் போட்டு திருமணம் செய்து மும்பையில் செட்டிலானார். அவர் கடைசியாக தலைகாட்டியது அஜித்தின் திருப்பதி படத்தில். கௌரவ வேடம். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி கணவர், குழந்தை என இருந்தவர் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார். இவரைப் போல் திருமணமாகி செட்டிலான நவ்யா நாயர், மீரா ஜாஸ்மின் போன்றவர்கள் மீண்டும் நடிப்புக்கு திரும்பிய நிலையில், லைலாவும் நடிக்க வந்துள்ளார்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் சர்தார் படத்தில் லைலா நடித்து வருகிறார். அவரது இரண்டாம் இன்னிங்ஸின் முதல் படமாக சர்தார் இருக்கும். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்தி இளம் போலீஸ் அதிகாரியாகவும், வயதான தோற்றத்திலும் வருகிறார். ஸ்பை த்ரில்லராக இந்தப் படம் தயாராகிறது.

அரபிக் குத்து பாடலுக்கு ஷில்பா ஷெட்டி, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அட்டகாச நடனம்!

Actress Laila returns to cinema after 16 years, laila majnu, laila meaning, laila movie, laila photos, laila name, laila age, actress laila reentry, actress laila parents, actress laila husband, actress laila movie list, actress laila movies, actress laila karthi movie, நடிகை லைலா, நடிகை லைலா திரைப்படம், நடிகை லைலா கணவர், நடிகை லைலா கார்த்தி, நடிகை லைலா கார்த்தி திரைப்படம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சர்தாருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து நடிப்பது குறித்து முடிவெடுக்க இருக்கிறார் லைலா.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி