ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிங்க முக ஆடையுடன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகை… ரசிகர்கள் கடும் விமர்சனம்

சிங்க முக ஆடையுடன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகை… ரசிகர்கள் கடும் விமர்சனம்

நடிகை கைலி ஜென்னர்

நடிகை கைலி ஜென்னர்

இந்த ஆடையின் உருவாக்கத்தின்போது எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிங்க முக ஆடையுடன் நடிகை கைலி ஜென்னர் ஃபேஷ ஷோவில் வலம் வந்து கவனம் பெற்றார். ஒரு தரப்பினர் இந்த ஆடைக்கு பாராட்டு தெரிவித்தாலும் இன்னொரு தரப்பினர் கடும் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். அமெரிக்க டிவி ஷோக்களில் முன்னணி நடிகையாக இருப்பர் கைலி ஜென்னர். இவர் சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் கைலி ஜென்னரை 379 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். 25 வயதாகும் கைலி ஜென்னர், நடிப்பை தவிர்த்து பிஸ்னஸ், ஃபேஷன் ஷோ உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பாரிஸ் ஃபேஷன் ஷோவில் அவர் சிங்க முக ஆடையுடன் பங்கேற்றது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சு அசல் சிங்கத்தைப் போலவே இந்த ஆடையின் தோற்றம் காணப்பட்டது. பாரிஸ் ஃபேஷன் வீக்கின் கலாசார நிகழ்வில் பங்கேற்ற கைலி ஜென்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சிங்க முக ஆடை ஃபோம் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக், விலங்குகளின் முடி மற்றும் பட்டு உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆடையின் உருவாக்கத்தின்போது எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கைலி ஜென்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஃபோட்டோவை பதிவிட்டு பீஸ்ட் வித் பியூட்டி என்று கூறியுள்ளார். இதற்கிடையே, கைலி ஜென்னரின் ஆடைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விலங்குகளை ஆடம்பர பொருளாக கருதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், சிங்கம் போன்ற அரிதான விலங்குகளை பாதுகாக்க வேண்டும், விலங்குகள் ஒன்றும் ஃபேஷன் பொருட்கள் அல்ல என்று கைலி ஜென்னரின் இன்ஸ்டாகிராமில் கமென்ட் செய்துள்ளனர். இதுகுறித்து பீட்டா அமைப்பின் தலைவர் இங்ரிட் நியூகிர்க், ‘கைலி ஜென்னரின் சிங்க முக ஆடை அற்புதமாக உள்ளது. 3டி தோற்றத்தில் இதனை சிறப்பாக வடிவமைத்துள்ளனர். மனம் இருந்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு இந்த வடிவமைப்பு ஓர் உதாரணம். விலங்குகள் வேட்டைக்கு எதிரான மெசேஜையும் இது சொல்கிறது’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Hollywood