ரஜினி - சிவா படத்தில் குஷ்புவுக்கு வில்லி கேரக்டரா...?

ரஜினி - சிவா படத்தில் குஷ்புவுக்கு வில்லி கேரக்டரா...?
ரஜினிகாந்த் | குஷ்பு
  • Share this:
ரஜினியின் 168-வது படத்தில் நடிகை குஷ்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிவா, தற்போது ரஜினியின் 168-வது படத்தை இயக்க உள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி இணைந்துள்ளார். இது அவருக்கு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தின் நாயகிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


படிக்க... பார்க்க: எனக்கு சோகமான நாள் இது... விபத்தில் மரணமடைந்த ரசிகருக்கு கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி!

மேலும் இந்தப் படத்தில் நடிகை குஷ்பு இணைந்துள்ளதாகவும், அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மன்னன், பாண்டியன், தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் - குஷ்பு ஜோடி இணைந்து நடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தற்போது ரஜினி - குஷ்பு ஜோடியை திரையில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஜவில் இணைந்த ராதாரவி... முழு செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்க
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading