Home /News /entertainment /

செல்ஃபி எடுக்கும்போது நடிகையை டென்ஷனாக்கிய ரசிகர்… என்ன செய்தார் தெரியுமா?

செல்ஃபி எடுக்கும்போது நடிகையை டென்ஷனாக்கிய ரசிகர்… என்ன செய்தார் தெரியுமா?

நடிகை க்ரித்தியுடன் செல்வி எடுத்துக் கொள்ளும் ரசிகர்

நடிகை க்ரித்தியுடன் செல்வி எடுத்துக் கொள்ளும் ரசிகர்

தங்களுக்கு பிடித்த பிரபலங்களிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆசை பெரும்பாலானவர்களிடம் உண்டு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் க்ரீத்தி சனோனை, குறும்புக்கார ரசிகர் ஒருவர் டென்ஷனாக்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.

    பிரலபமானவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் உலகம் முழுவதும் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தங்களுக்கு பிடித்த பிரபலங்களிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆசை பெரும்பாலானவர்களிடம் உண்டு.

    இதனை பிரபலங்களும் அன்பின் அடையாளமாக கருதி, ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பார்கள். சில சமயம் அவர்கள் ரசிர்களின் ஃபோன்களை பறித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

    Kiruthiga Udhayanidhi: கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் சக்சஸ் மீட் படங்கள்!

    இந்நிலையில் இந்தி முன்னணி நடிகை க்ரீத்தி சனோனிடம் குறுப்பு செய்துள்ளார் ரசிகர் ஒருவர். அவரை, பாதுகாவலர்கள் அகற்றியுள்ளனர்.

    நடிகை க்ரீத்தி சனோன்


    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற க்ரீத்தி சனோனிடம் செல்ஃபி எடுக்க ரசிர்கள் முயன்றனர். அவர்களின் உயரம் குறைவாக உள்ள நபருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவரும் தனது ஃபோனை நடிகையிடம் கொடுத்து செல்ஃபி எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

    இதனை ஏற்று, நடிகை க்ரீத்தி சனோன் அந்த நபருக்கு செல்ஃபி எடுத்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக தான் வைத்திருந்த கூலிங் கிளாசை அவசர அவசரமாக எடுத்து மாட்டி, இன்னொரு செல்ஃபி வேணும் என்று கூறியுள்ளார் அந்த குறும்புக்காரர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)






    இதனால் டென்ஷனாகிப் போன க்ரீத்தி, அங்கிருந்தவர்களை அழைக்க அவர்களும் அந்த குறும்புக்காரரை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி