Home /News /entertainment /

தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை கிருத்தி ஷெட்டி... எந்த படத்தில் தெரியுமா?

தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை கிருத்தி ஷெட்டி... எந்த படத்தில் தெரியுமா?

நடிகை கிருத்தி ஷெட்டி

நடிகை கிருத்தி ஷெட்டி

தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இன்னும் பெயரிடப்படதா அந்த படத்திலும் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கிருத்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் தி வாரியர் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

    மேலும், தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இன்னும் பெயரிடப்படதா அந்த படத்திலும் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Also read... கர்ணன் படத்தை மிஞ்சிய தனுஷின் நானே வருவேன் டிஜிட்டல் விற்பனை

    மேலும் இந்த படத்தில் முன்னதாக பிரியங்கா மோகன் தான் நடிப்பதாக இருந்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தன. தொடர்ந்து பிரியங்கா மோகன் கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகிக் கொண்டதாகவும் அந்த வேடத்திற்கு தற்போது கிருத்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush, Entertainment

    அடுத்த செய்தி