நடிகை மட்டுமின்றி அவரது கணவர், பெற்றோருக்கும் கொரோனா பாசிட்டிவ்..

பிரபல நடிகையின் கணவர் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை மட்டுமின்றி அவரது கணவர், பெற்றோருக்கும் கொரோனா பாசிட்டிவ்..
நடிகை கோயல் மாலிக்
  • Share this:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 8.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 22,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று. இந்நிலையில் வங்காள நடிகையான கோயல் மாலிக் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர் மட்டுமின்றி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான 75 வயதுடைய ரஞ்சித் மாலிக் என்பவருக்கும், தாயார் தீபா மாலிக் என்பவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்திருக்கின்றன.

மேலும் நடிகை கோயல் மாலிக்கின் கணவரும், தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகை கோயல் மாலிக் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.


நடிகை கோயல் மாலிக் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading