Kiara Advani: ஷங்கர் படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி?

கியாரா அத்வானி

பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கியிருக்கும் சேர்ஷா படத்திலும் கியாரா அத்வானி தான் நாயகி.

  • Share this:
    இந்தியின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானியை தனது படத்தின் நாயகியாக்கியுள்ளார் ஷங்கர்.

    இந்தியன் 2 தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதை பாதியில் விட்டு, தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் இயக்க தீர்மானித்துள்ளார் ஷங்கர். அதில் முதலில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் தெலுங்குப் படம் தயாராகிறது. இதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார் ஷங்கர். முதல்கட்டமாக நாயகியாக நடிக்க கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார். எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி, கபீர் சிங் உள்பட பல முக்கிய இந்திப் படங்களில் நடித்திருக்கும் கியாரா அத்வானி தெலுங்கில் மகேஷ் பாபுடன் பரத் அனே நேனு படத்திலும், ராம் சரணுடன் வினய விதேய ராமா படத்திலும் ஏற்கனவே நடித்துள்ளார்.

    பில்லா பட இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கியிருக்கும் சேர்ஷா படத்திலும் கியாரா அத்வானி தான் நாயகி. இது தவிர பூல் புலையா 2 உள்பட சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் ஷங்கரின் முதல் தெலுங்குப் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு, இன்னும் மூன்று வாரங்களில் அது குறித்து பதிலளிப்பதாக ராம் சரண் கூறியுள்ளார். தற்போது அவர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் தனது தந்தை சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: