நடிகை குஷ்பு தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
90-களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து அப்போதைய கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்காக கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தாலே, தமிழ் ரசிகர்கள் மனதில் அவர் எந்தளவு இடம் பிடித்திருந்தார் என்பதை புரிந்துக் கொள்ளலாம். சினிமா மட்டுமல்லாமல் 20 வருடங்களுக்கு முன்பாகவே சின்னத்திரையிலும் அறிமுகமானார் குஷ்பு.
நடிகை என்பதைக் கடந்து தயாரிப்பாளர், கிரியேட்டிவ் டைரக்டர் எனப் பல திறமைகளை தன்னிடம் கொண்டுள்ளார். தற்போது சீரியல் எழுத்தாளராகவும் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘மீரா’ சீரியலில் நடிகையாகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார்.
படப்பிடிப்புக்கு போகும் வழியில் விபத்து... பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளுக்கு ஏற்பட்ட சோகம்
திரைத்துறையை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் தற்போது பாஜக-வில் இருக்கிறார். தற்போது அரசியல் காரணங்களுக்காக டெல்லி சென்றிருக்கிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் கையில் ஊசியுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள குஷ்பு, குணமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.