• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரண்மனை 3 ரிலீஸ் தேதியை அறிவித்த குஷ்பு!

அரண்மனை 3 ரிலீஸ் தேதியை அறிவித்த குஷ்பு!

குஷ்பு

குஷ்பு

அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் அரண்மனை 3 ரசிகர்களை பெருமளவு திரையரங்குகளுக்கு அழைத்துவரும் என திரையுலகம் நம்புகிறது.

  • Share this:
    அரண்மனை 3 படம் எப்போது வெளியாகிறது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளரான நடிகை குஷ்பு நேற்று அறிவித்தார்.

    சுந்தர் சி. இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்கள் வெற்றி பெற்ற நிலையில், அரண்மனை 3 படத்தை எடுத்தார். குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் படத்தை தயாரித்தது. ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா. சாக்ஷி அகர்வால், சுந்தர் சி. மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, குஷ்பு, கோவை சரளா, மனோபாலா உள்பட ஏராளமானவர்கள் நடித்திருந்தனர்.

    இந்தப் படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என குஷ்பு நேற்று அறிவித்தார். அரண்மனை சீரிஸ் ஹாரர் காமெடியில் தயாரானவை. அதற்கென தனித்த ரசிகர்கள் இருக்கிறார்கள். அரண்மனை 3 படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியான தலைவி, லாபம் படங்கள் ஏமாற்றத்தை அளித்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் அரண்மனை 3 ரசிகர்களை பெருமளவு திரையரங்குகளுக்கு அழைத்துவரும் என திரையுலகம் நம்புகிறது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Actress Khushbu Sundar announces Aranmanai 3 release date, Sundar C Aranmanai 3, aranmanai 3 Firstlook and Motion poster, Aranmanai 3, arya aranmanai 3, Aranmanai 3 movie, சுந்தர் சி, அரண்மனை 3 ஃபர்ஸ்ட் லுக், அரண்மனை, அரண்மனை 3, சுந்தர் சி அரண்மனை 3, Aranmanai 3 release date, அரண்மனை 3 ரிலீஸ் தேதி
    அரண்மனை 3


    அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதியின் ரெட் ஜெண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: