Home /News /entertainment /

உருவத்தை கிண்டல் செய்த பெண்ணுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு… நெட்டிசன்கள் பாராட்டு

உருவத்தை கிண்டல் செய்த பெண்ணுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு… நெட்டிசன்கள் பாராட்டு

நடிகை குஷ்பு லேட்டஸ்ட் க்ளிக்

நடிகை குஷ்பு லேட்டஸ்ட் க்ளிக்

எடையை அதிரடியாக குறைத்து வரும் குஷ்புவுக்கு அவரது நண்பர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    சோஷியல் மீடியாவில் உருவத்தை கிண்டல் செய்த பெண் ஒருவருக்கு நடிகை குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    நடிப்பு, அரசியல் என 2 துறைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை குஷ்பு. அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற குஷ்புவின் நடிப்பு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.

    பாஜக நிர்வாகியாக இருந்து வரும் குஷ்பு கட்சி பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரது ட்விட்டர் பக்கம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

    ஹனிமூன் சென்ற இடத்தில் சொகுசு கப்பலில் தூங்கிய நடிகர்… நெட்டிசன்கள் கிண்டல்

    சமீப காலமாக குஷ்பு தனது உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் ஸ்லிம்மாக காட்சியளிக்கும் குஷ்பு, ரசிகர்களை கவனம் ஈர்த்துள்ளார்.

    குஷ்புவின் பதிவுகளுக்கு நெகடிவான விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் கிடைக்கும். அந்த வகையில் குஷ்பு வெளியிட்ட அவரது லேட்டஸ்ட் போட்டோவுக்கு கமென்ட் செய்த ரேகா என்ற பெண் ஒருவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஏன் ஸ்லிம்மாக வேண்டும்? என்று சர்ச்சைக்குரிய வகையில் எதிர்மறையாக கமென்ட் செய்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்த குஷ்பு, நீங்கதான் அதற்கு பணம் கொடுத்தீர்களா மைடியர்? மற்றவர்களை காயப்படுத்தி சந்தோஷப்படும் உங்களைப் பார்த்தால் அவமானமாக உள்ளது என்று காட்டமாக கூறினார். குஷ்புவின் இந்த கமென்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்… மேக்கிங் வீடியோ ரிலீஸ்

    எடையை அதிரடியாக குறைத்து வரும் குஷ்புவுக்கு அவரது நண்பர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் 90 களில் பார்த்த குஷ்பு திரும்பி வந்துவிட்டார் என்று கூறி, குஷ்புவை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Khushbu

    அடுத்த செய்தி