நடிகை குஷ்புவுக்கு திடீர் அறுவை சிகிச்சை

தனது கண்ணில் இருந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவுக்கு திடீர் அறுவை சிகிச்சை
குஷ்பு
  • Share this:
நடிகை குஷ்பு சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். நடிகை என்பதையும் தாண்டி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பதிவில் கண்ணில் கட்டுப் போட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் குஷ்பு. இதையடுத்து அவருக்கு என்ன ஆனது என்று பலரும் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் நாம் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கண்ணில் சிறிய கட்டி இருந்தது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இன்னும் ஒருவார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தற்போது நான் நலமாக இருக்கிறேன். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிக்க வேண்டிய பணிகள் எதுவும் இப்போது இல்லை. வாட்ஸ் அப், ட்விட்டரில் இப்போது நேரம் செலவிட முடியாது” என்று தெரிவித்தார்.
குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
First published: August 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading