ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அதிகாரப்பூர்வ செய்திக்காக காத்திருந்தேன்'' வாரிசு செல்ஃபி குறித்து ட்வீட் செய்த குஷ்பு!

''அதிகாரப்பூர்வ செய்திக்காக காத்திருந்தேன்'' வாரிசு செல்ஃபி குறித்து ட்வீட் செய்த குஷ்பு!

நடிகர் விஜய் மற்றும்  ராஷ்மிகா உடன் குஷ்பு

நடிகர் விஜய் மற்றும்  ராஷ்மிகா உடன் குஷ்பு

Varisu Update | விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி 2023 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர். சினிமாவை தொடர்ந்து சின்னத்திரையில் கால் பதித்து, அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் குஷ்புவின் செல்பி வீடியோ இணையத்தில் வைரலானது.

  வாரிசு படத்தின் ஸ்டில்ஸ் இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. அதில் குஷ்பு செல்பி எடுத்த புகைப்படமும் ஒன்று.  முன்னதாக வாரிசு படத்தில் குஷ்பு நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

  நடிகர் விஜய் மற்றும்  ராஷ்மிகா உடன் எடுத்த புகைப்படம் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது கேஸூவலாக எடுத்தது என்று, படப்பிடிப்பு நான் இருக்கும் இடத்தின் அருகில் நடந்து கொண்டு இருந்தது அதனால் விஜயை காண சென்றேன் என்றும் குஷ்பு சொன்னதாகவும் கூறப்பட்டது.

  Read More: வாரிசு படத்தை வாங்கிய பிரபல ஓடிடி.. ரிலீசுக்கு முன்பே கையெழுத்தாகும் ஒப்பந்தம்.!

  ஆனால் தற்பொழுது வெளியான புகைப்படத்தின் மூலம் குஷ்பு வாரிசு படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.  இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. அந்தப் பதிவில்,

  ''இந்தக் குடும்பத்தின் அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. (நான் எதை பற்றி எதையும் கூறுவதற்கு முன்பு தயாரிப்பாளர் மற்றும் பட குழுவினர் அதிகாரப்பூர்வ செய்திக்காகக் காத்திருந்தேன்.) என்று கூறியுள்ளார்.

  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ம் தேதி 2023 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Kushboo