• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சினிமாவில் எண்ட்ரியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா?

சினிமாவில் எண்ட்ரியாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா?

அக்காவுடன் கீர்த்தி

அக்காவுடன் கீர்த்தி

"கலாமந்திர்" தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படமொன்றை, ரேவதி தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
    நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா சினிமாவில் கால் பதித்துள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’யில் நடித்து, இளம் வயதிலேயே தேசிய விருதை பெற்றார். அதன் பிறகு இவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்தது. கீர்த்தியின் குடும்பமே சினிமா பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.

    கீர்த்தியின் அப்பா பிரபல மாலையாள பட தயாரிப்பாளர். அம்மா மேனகா, மம்முட்டி, ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷூம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கீர்த்தியின் அக்கா, ரேவதியும் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகையா என்றால், இல்லை. சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார். இதற்காக தன்னுடைய அப்பா சுரேஷ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனமான "கலாமந்திர்" தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படமொன்றை, ரேவதி தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

    "வாஷி" எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: