அமேசானில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷின்‘பெண்குயின்’...! ரிலீஸ் தேதி அறிவிப்பு

பெண்குயின் | கீர்த்தி சுரேஷ்

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.

  • Share this:
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தாலும் திரையரங்கங்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் இப்போதிருக்கும் சூழலில் தனி மனித இடைவெளி என்பது மிக நம் வாழ்க்கைச் சூழலில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

    இந்த ஊரடங்கால் திரைத்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களது கடுமையான எதிர்ப்பையும் மீறி படத்தை வரும் 29-ம் தேதி சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் அமேசான் பிரைமில் வெளியிடுகிறது.

    பொன்மகள் வந்தால் திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பெண்குயின் திரைப்படமும் ஜூன் 19-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.



    ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்பிணி பெண்ணாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published: