முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனுஷ் பட இயக்குனரின் திருமணத்தில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்… லைக்ஸை அள்ளும் க்யூட் ஃபோட்டோ

தனுஷ் பட இயக்குனரின் திருமணத்தில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்… லைக்ஸை அள்ளும் க்யூட் ஃபோட்டோ

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் பட இயக்குனரின் திருமணத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து முடித்து, அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தை இயக்கிய வெங்கி அட்லூரிக்கு திருமணம் நேற்று முடிந்தது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், இயக்குனர் வெங்கி அட்லூரி, மணப்பெண் பூஜாவை கரம்பிடித்தார். இந்த திருமண நிகழ்வில் திரைத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வண்ணமயமான ஆடையில் கீர்த்தி சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. கீர்த்தியுடன் தெலுங்கு நடிகர் நிதினும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.

2007-ஆம் ஆண்டு முதல் வெங்கி தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வருகிறார். 2018 இல் வெளிவந்த தொலி பிரேமா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர்,  மிஸ்டர் மிஞ்சு,ரங் தே படங்களை இயக்கி இருக்கிறார். இந்நிலையில் தனுஷின் வாத்தி படத்தையும் இயக்கி முடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த மாதம் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற வாரிசு படத்தை, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியிருந்தார். அந்தவகையில் வெங்க அட்லூரி இயக்கியிருக்கும் வாத்தி திரைப்படமும், சூப்பர் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Keerthy suresh, Kollywood movies