ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிப்புக்கு டாட்டா... திருமணத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்?

நடிப்புக்கு டாட்டா... திருமணத்துக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அவர்களின் மூதாதையர் வீட்டிற்கும், அங்குள்ள குலதெய்வ கோவிலுக்கும் சமீபத்தில் கீர்த்தியின் குடும்பத்தினர் சென்று வந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், முன்னாள் கதாநாயகி மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மிக இளம் வயதிலேயே ‘மகாநடி / நடிகையர் திலகம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார். தற்போது அவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக உள்ளார்.

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. அவருக்கும் கேரளாவை சேர்ந்த அரசியல் தொடர்புள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. 30 வயதான நடிகை அதை மறுத்தார். இப்போது மீண்டும் கீர்த்தியின் திருமணம் குறித்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மேனகாவும் சுரேஷும் ஏற்கனவே மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டதாகவும், கீர்த்தியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அவர்களின் மூதாதையர் வீட்டிற்கும், அங்குள்ள குலதெய்வ கோவிலுக்கும் சமீபத்தில் கீர்த்தியின் குடும்பத்தினர் சென்று வந்தனர். திருமணத்தை நல்லபடியாக நடத்தவே, அவர்கள் அங்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி, படங்களில் நடிப்பதை மெதுவாக நிறுத்திவிட்டு, திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்துவார் என்று சில சோர்ஸ்கள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்திய செவ்வந்தி சீரியல் டீம்!

தவிர, கீர்த்தி தற்போது ‘மாமன்னன்’, ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அவர் அடுத்ததாக ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் சுதா கொங்கரா இணையும் பான் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எம்.எஸ். பாஸ்கர் முக்கியமான கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: