ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எஃப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்… படத்தின் டைட்டில் அறிவிப்பு

கே.ஜி.எஃப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்… படத்தின் டைட்டில் அறிவிப்பு

படக்குழுவினருடன் கீர்த்தி சுரேஷ்

படக்குழுவினருடன் கீர்த்தி சுரேஷ்

தொடர் வெற்றி, வரவேற்புகள் காரணமாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் மாறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கே.ஜி.எஃப். படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்தின் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் திரைப்படங்களை Hombale Films  நிறுவனம் தயாரித்திருந்தது. அதே நிறுவனம் காந்தாரா திரைப்படத்தையும் தயாரித்தது. இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன.

இதனால் அந்த தயாரிப்பு நிறுவனம் இந்திய சினிமா துறையில் முக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும் நடிகர் சூர்யா அந்த நிறுவனம் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஜய் ரசிகர்கள்…

இந்த நிலையில் தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்குகிறார்.

துணிவு படத்தின் புதிய போஸ்டர்.. வைரலாகும் மாஸ் அஜித்!

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியுள்ளன. அந்த திரைப்படத்தை Hombale Films நிறுவனம் தயாரிக்கிறது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் தற்போது குறிப்பிட்ட சில திரைப்படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ரகு தாத்தா திரைப்படமும் ஒன்று.  இது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த கீர்த்தி சுரேஷின் சாணி காயிதம் படம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

தொடர் வெற்றி, வரவேற்புகள் காரணமாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் மாறியுள்ளார். அடுத்ததாக உதயநிதியுடன் கீர்த்தி இணைந்து நடித்துள்ள மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

First published:

Tags: Keerthi suresh