Keerthi Pandian: லாக்டவுனில் விவசாயம் செய்து வரும் கீர்த்தி பாண்டியன்!

கீர்த்தி பாண்டியன்

சமீபத்தில் வெளிவந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் இது.

  • Share this:
    ஊரடங்கில் நடிகைகள் பலவிதங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். சிலர் தெருவில் இறங்கி பசித்தவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.

    சிலர் இணையத்தில் பியூட்டி டிப்ஸ் பகிர்கிறார்கள். உடற்பயிற்சி செய்வது எங்ஙனம் என சிலர் கற்றுக் கொடுக்கிறார்கள். வரலட்சுமி தனது நாயை, 'மீட் மை சன்' என அறிமுகம் செய்கிறார். இளம் நடிகை கீர்த்தி அருண்பாண்டியன் சொந்த ஊரில் விவசாயம் செய்கிறார்.

    தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி அருண்பாண்டியன், சமீபத்தில் வெளிவந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் இது. இதில் கீர்த்தியின் தந்தையாக அருண்பாண்டியனே நடித்திருந்தார்.

    கொரோனா இரண்டாம் அலை காலத்தில் இதயப் பிரச்சனை காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அருண்பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியவர் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்குள்ள தங்களின் விவசாய நிலத்தில் விவசாய வேலைகள் செய்து வருகிறார் கீர்த்தி. வயலில் வேலை செய்யும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வருடம் அதிகபட்சமாக பெய்த மழைக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

    விவசாய வேலை செய்யும் நாயகி வேடம் இருந்தால் இயக்குனர்கள் கீர்த்தியை அணுகலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: