சென்னையில் ஐ.பி.எல்... கடந்த வருடம் போராடிய தமிழர்கள் எங்கே...? கஸ்தூரி கேள்வி

கடந்தாண்டு சென்னையில் நடைபெற வேண்டிய போட்டிகள், புனே மைதானத்துக்கு மாற்றப்பட்டன.

news18
Updated: March 23, 2019, 4:43 PM IST
சென்னையில் ஐ.பி.எல்... கடந்த வருடம் போராடிய தமிழர்கள் எங்கே...? கஸ்தூரி கேள்வி
கஸ்தூரி
news18
Updated: March 23, 2019, 4:43 PM IST
கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை எதிர்த்து போராடியவர்கள் இந்த வருடம் எங்கே போனார்கள் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டி என்பதால், பல முக்கிய பிரபலங்கள், உயர் அதிகாரிகள் வருவார்கள். மேலும், இரு அணிகளிலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசாம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும் சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மைதானம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ படை உள்பட மொத்தம் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

dhoni, kholi
தோனி மற்றும் கோலி.


கடந்த ஆண்டு சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பதற்காக, சென்னையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதனால், சென்னையில் நடைபெற வேண்டிய போட்டிகள், புனே மைதானத்துக்கு மாற்றப்பட்டன.
Loading...
Chepauk Stadium Security
சேப்பாக்கத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதைக்குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, “இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ?” என்று கூறியுள்ளார்.நடிகை ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு நாடகம் அம்பலமானது எப்படி? - வீடியோ

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...