'நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான் தான்' மாரிதாஸுக்கு கஸ்தூரி பதிலடி

கஸ்தூரி

கொள்கை அளவில் மாரிதாஸுடன் பெருமளவு ஒத்துப் போகிறவர் தான் கஸ்தூரி.

 • Share this:
  வலைப்பதிவர் மாரிதாஸின் மரியாதையற்ற பதிவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

  வலைப்பதிவர் மாரிதாஸ், நடிகர் சித்தார்த்தை வரிக்குவரி டேய் என்றும், கூத்தாடி என்றும் விளித்து நாகரிகமற்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சித்தார்த் தொடர்ச்சியாக மத்திய அரசின் மந்தமான போக்கை கண்டித்தும், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவியலுக்கு புறம்பான நடவடிக்கைகளை விமர்சித்தும் பதிவுகள் போடுகிறார். இதற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சித்தார்த்தின் தொலைபேசி எண்ணை பொதுவில் பகிர்ந்து, மிரட்டல் விடுத்தனர்.

  இந்நிலையில் மாரிதாஸ், சித்தார்த்தை டேய் கூத்தாடி என்று விளித்து நாகரீகமற்ற முறையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை நடிகை கஸ்தூரி கண்டித்துள்ளார்.  "எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். எதற்காக சித்தார்த்தின் தொழிலை இங்கு விமர்சிக்க வேண்டும்? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான்தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி, சரியா? பிஜேபியில் உள்ள நடிகர்கள் இந்தத் தாக்குதலை ஒத்துக்கொள்வார்களா?" என்று தனது ட்விட்டர் பதிவில் கஸ்தூரி கேட்டுள்ளார்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: