பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை - கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை என்று நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை - கஸ்தூரி குற்றச்சாட்டு
நடிகை கஸ்தூரி
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 1:53 PM IST
  • Share this:
நடிகை கஸ்தூரி அரசியல், சமூக பிரச்னைகள் குறித்து சமூகவலைதளத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர்.  பிக்பாஸ் தொடர்பாக தொடர்ச்சியாக பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்த அவர், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டதற்காக இதுவரை அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ”விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இன்னும் எனக்கு சம்பளம் தரப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே, ஆதரவற்ற குழந்தைகளின் ஆப்ரேஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. இதிலும் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 4-ம் தேதி தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில் கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று ட்வீட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கஸ்தூரியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் கஸ்தூரிக்கு ஆதரவாக கமெண்ட் பதிவிட்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் கஸ்தூரி விளம்பரத்துக்காக இப்படி பதிவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

கஸ்தூரி தனது பதிவில் விஜய் டிவியை டேக் செய்திருக்கும் நிலையில் சேனல் நிர்வாகம் இதுகுறித்து எந்த பதிலும் பதிவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading