சூர்யா தேவியை முதலில் காப்பாற்ற வேண்டும் - முயற்சியில் இறங்கிய கஸ்தூரி

சூர்யா தேவியை காப்பாற்றும் முயற்சியில் தான் இறங்கியிருப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சூர்யா தேவியை முதலில் காப்பாற்ற வேண்டும் - முயற்சியில் இறங்கிய கஸ்தூரி
சூர்யா தேவி | கஸ்தூரி
  • Share this:
நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் திருமணம் கடந்த 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து எலிசபெத் ஹெலனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி சூர்யா தேவி என்பவர் இதற்காகவே யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி அதில் வனிதா விஜயகுமாரை விமர்சித்து வீடியோக்கள் பதிவிட்டார். இதையறிந்த வனிதா விஜயகுமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் போரூர் மற்றும் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சூர்யா தேவி மீது இரண்டு முறை புகாரளித்தார்.சில நாட்களுக்கு முன்னர் வனிதா, சூர்யா தேவி இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர். அதன் பின்பும் சூர்யா தேவி தொடர்ச்சியாக தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வந்தார்.


மேலும் படிக்க: தஞ்சாவூர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வனிதா மீது காங்கிரஸ், பாஜகவினர் போலீசில் புகார்

இந்நிலையில் சூர்யா தேவியை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சூர்யா தேவி கைது செய்யப்பட்டதை அறிந்து கொண்ட கஸ்தூரி, அவரைக் காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த வீடியோவில் கஸ்தூரி கூறியிருப்பதாவது, காலை எழுந்தவுடன் நான் உள்பட 4 பேர் மீது வனிதா புகார் அளித்துள்ள செய்தியும், சூர்யா தேவி கைது செய்யப்பட்டு செய்தியையும் பார்த்தேன். என் மீது உள்ள புகார், காமெடியை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

அது ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் தற்போது முதல் வேலையாக சூர்யாதேவியை காப்பாற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading