முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி

கரீனா - அம்ரிதா

கரீனா - அம்ரிதா

கொரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நெருங்கிய தோழி அம்ரிதா அரோரா. வெளியிடங்களுக்கு இவர்கள் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தியிருந்தும் கொரோனா விதிமுறைகளை மீறி கரீனா கபூர் மற்றும் அம்ரிதா ஆகிய இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு கொரோனா பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

முன்னதாக, கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், ஊர்மிளா மடோன்கர், மலைக்கா அரோரா, அக்‌ஷய் குமார், அமித் சாத், கோவிந்தா போன்ற பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Kareena kapoor