Home /News /entertainment /

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரசன்னாவுடன் இணையும் கனிகா - இன்ஸ்டாகிராமில் எமோஷனல் பதிவு!

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரசன்னாவுடன் இணையும் கனிகா - இன்ஸ்டாகிராமில் எமோஷனல் பதிவு!

பிரசன்னா - கனிகா

பிரசன்னா - கனிகா

20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகும் புதிய தொடரில் பிரசன்னாவும், கனிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

நடிகை கனிகா புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். இதில் பிரசன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உன்னோடு பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் கனிகா.

2002-ல் சுசிகணேசன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 5 ஸ்டார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பிரசன்னா, கனிகா  இருவரும் அறிமுகமானார்கள். ஐந்து நண்பர்களுக்கு இடையிலான நட்பை பற்றிய கதை இது. பாடகி அனுராதா ஸ்ரீராமும், அவரது கணவரும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு பிரசன்னாவும், கனிகாவும்  இணைந்து நடிக்கவில்லை. கனிகா மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட மலையாள நடிகையாகவே மாறிப்போனார். 2008-ல் கனிகா, ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!



 




View this post on Instagram





 

A post shared by Kaniha (@kaniha_official)






ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

சமீபத்தில் பிருத்விராஜ் இயக்கி நடித்த மோகன்லாலின் புரோ டாடி திரைப்படத்தில், நாயகி கல்யாணியின் அம்மாவாக கனிகா நடித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகும் புதிய தொடரில் பிரசன்னாவும், கனிகாவும் இணைந்து நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கனிகா, "2002 ஆம் ஆண்டு சுசி கணேசனின் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் என்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல் திரை ஜோடியான பிரசன்னாவுடன் மீண்டும் நடிக்கிறேன். இது ஒரு முழு சுழற்சி போலிருக்கிறது. உன்னோடு மீண்டும் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடரை ஆகா தமிழ் ஓடிடி தளம்  தயாரிக்கிறது. விக்னேஷ் விஜயகுமார் என்பவர் இந்தத்  தொடரை இயக்குகிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி