ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆதார் இருந்தாலே ட்விட்டரில் ப்ளூ டிக் தரணும்… எலானுக்கு கோரிக்கை வைத்த கங்கனா!

ஆதார் இருந்தாலே ட்விட்டரில் ப்ளூ டிக் தரணும்… எலானுக்கு கோரிக்கை வைத்த கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத்

எனக்கு ப்ளூ டிக் கிடைக்கிறது. ஆனால் என் அப்பாவுக்கு 3-4 முறை முயற்சித்தும் கிடைக்கவில்லை – கங்கனா

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆதார் வைத்திருக்கும் அனைவருக்கும் ட்விட்டரில் ப்ளூ டிக் அளிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை வைத்துள்ளார்.

  இதுதொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியிருப்பதாவது-

  சிறந்த சமூக ஊடகமாக ட்விட்டர் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பயன் அடைந்து வருகிறார்கள். ஆனால், எதனை அடிப்படையாக கொண்டு ட்விட்டரில் ஐடிகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுகிறது என்பது இன்னமும் தெரியவில்லை. இதில் குழப்பம் நீடிக்கிறது.

  சிலருக்கு வெரிஃபிகேஷன் வெற்றிகரமாக முடிந்து ப்ளூ டிக் கிடைக்கிறது. ஆனால் அதே தகுதியுடைய சிலருக்கு கிடைக்கவில்லை. எனக்கு ப்ளூ டிக் கிடைக்கிறது. ஆனால் என் அப்பாவுக்கு 3-4 முறை முயற்சித்தும் கிடைக்கவில்லை.

  WATCH – ‘லவ் டுடே’ படத்திலிருந்து ‘சாய்ச்சிட்டாளே!!’ பாடல்

  எனவே ஆதார் வைத்திருக்கும் அனைவருக்கும் ப்ளூ டிக் கிடைக்க வேண்டும். ட்விட்டரில் ப்ளூ டிக் சேவைக்கு பணம் கட்ட வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன். எல்லாவற்றையும் இலவசமாக ட்விட்டர் அளித்து விட்டால் அதன் செலவுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?

  ட்விட்டர் ஒன்றும் தகவல்களை விற்கவில்லை. ட்விட்டர் நம்மை அதன் ஒரு பகுதியாக ஏற்கிறது. அதில் உங்களுக்கு ஃபாலோயர்ஸ் கிடைத்து உங்களது எண்ணமும், எழுத்தும்தான் விற்பனையாகப் போகின்றன. அதனால்தான் சொல்கிறேன் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்த கூடாது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? அப்டேட்டை வெளியிட்ட ராக்கி பாய் யாஷ்!

  ட்விட்டர் சமூக ஊடகத்தை உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதன்பின்னர் தலைமை அதிகாரிகள், முக்கிய ஊழியர்கள் நீக்கம், கட்டண முறை அமல் உள்பட பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  குறிப்பாக ட்விட்டரில் சேவைக்கு கட்டணம் முறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ப்ளூ டிக் எனப்படும், ட்விட்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஐடியை பயன்படுத்துவோர் மாதம் ரூ. 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 656 ரூபாயை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு எலான் மஸ்க் வந்துள்ளார்.

  இந்த சேவையில் கூடுதல் பயன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக ட்விட்டர் கட்டண சேவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kangana Ranaut, Twitter