Kangana Ranaut: ’மூன்றாவது குழந்தை பெற்றால் சிறை’ - அதிர்ச்சி கிளப்பும் கங்கனா ரனாவத்

Kangana Ranaut: ’மூன்றாவது குழந்தை பெற்றால் சிறை’ - அதிர்ச்சி கிளப்பும் கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து என்கிற பெயரில்ல் பாஸிசத்தை தொடர்ந்து உமிழ்ந்து வருகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தற்போது இன்னொரு சர்ச்சையிலும் அவர் சிக்கியிருக்கிறார்.

  • Share this:
    நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து என்கிற பெயரில்ல் பாஸிசத்தை தொடர்ந்து உமிழ்ந்து வருகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தற்போது இன்னொரு சர்ச்சையிலும் அவர் சிக்கியிருக்கிறார்.

    இந்தியாவில் இப்போது மக்கள் இறந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதன் மக்கள் தொகை தான் என்று குற்றம்சாட்டியிருக்கும் கங்கனா, இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. சட்டவிரோதமாக 25 கோடி பேராவது குடியேறியிருப்பார்கள். ஆனால், இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் 3 மடங்கு இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 3-வது குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களுக்கு சிறைத்தண்டனை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    மேலோட்டமாகப் பார்த்தால் கங்கனா சொல்வது சரி தானே எனத் தோன்றும். ஆனால், அதனை இவர் எந்த நேரத்தில் சொல்கிறார் என்பது முக்கியமானது. ஒரு பேரிடர் நிகழ்கையில், அதனை சரியாக கையாளாத அதிகார வர்க்கத்தை விமர்சிக்காமல் மொத்த பழியையும் மக்கள் மீது சுமத்துவதுதான் பாஸிசக்கோட்பாடு. அதையேத்தான் கங்கனாவும் செய்திருக்கிறார், என விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

    மக்கள் தொகையை கட்டுப்படுத்த நாமிருவர் நமக்கிருவர், நாமிருவர் நமக்கொருவர் என கோஷங்கள் முன்வைக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் இதில் முன்னிலையில் இருந்தன. தீவிர பிரச்சாரத்தால் மக்கள் தொகையும் தென்னிந்திய மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வடமாநிலங்களில் மக்கள் தொகை பெருகியது. மோடி பிரதமரான பிறகு மக்கள் தொகை அடிப்படையிலேயே மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவோம் என்று செயல்பட்டு வருகிறார். இதனால், தென்னிந்திய மாநிலங்கள் குறைவான நிதியும், உபி போன்ற வடமாநிலங்கள் அதிக நிதியையும் பெறுகின்றன. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு கிடைத்த பரிசு இது. கங்கனா போன்ற திடீர் தீர்க்கதரிசிகளுக்கு இந்த அரசியல் புரியாது. அவர்கள் இது குறித்து பேசவும் மாட்டார்கள்.

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா திணறுகிறது. வெளிநாடுகளுக்கு ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஆக்சிஜனை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று மிகவும் காலந்தாழ்த்தி ஏப்ரல் 20-ஆம் தேதி மத்திய அரசு அறிவிக்கிறது. உடனடியாக இந்த தடையை அமல்படுத்தக் கூடாதா, எதற்கு இரண்டு நாள் அவகாசம் என்று மத்திய அரசை நீதிமன்றம் கண்டிக்கிறது. இரண்டாவது அலை வரும் என்று தெரிந்தும், வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளது. மோடியையோ, மத்திய அரசையோ விமர்சிக்காமல், ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு கங்கனா பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவது நகைமுரணாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    ஆக்சிஜன் இல்லாமல் நீங்களோ உங்கள் நண்பர்கள், உறவினரோ அவதிப்பட்டால் போய் உடனே மரம் நட வேண்டுமாம். வேத உணவுகள் சாப்பிட்டு, துணிகளை மறுசுழற்சி செய்து, இயற்கை வாழ்வு வாழ வேண்டுமாம். இப்போதைய சூழலில் இம்மாதிரியான பிரச்சாரம் தேவையா எனவும் கங்கனாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: