Kangana Ranaut: சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Kangana Ranaut: சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம்

கங்கனா ரனாவத்

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

  • Share this:
    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

    மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குப் பிறகு, வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ட்வீட்களை நடிகை கங்கனா ரனவத் வெளியிட்டு வருவதாகக் கூறி அவரது ட்விட்டர் கணக்கு, நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. "வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் தவறான நடத்தை" குறித்த ட்விட்டர் கொள்கையை இந்த கணக்கு மீண்டும் மீண்டும் மீறியதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் என 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளைப் பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக 77 இடங்களைப் பிடித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்று 5 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்ததாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்த கங்கனா ரனாவத் “பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு முன்பு நடிகர் சோனு சூட்டின் சேவை மனப்பான்மையை விமர்சித்து, அவர் ஒரு மோசடி பேர்வழி என விமர்சித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சர்ர்சையான கருத்துக்களை கங்கனா வெளியிட்டு வருவதாகக் கூறி, அவரது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். இதனால் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் #KanganaRanaut என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: