Kangana Ranaut: கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி

கங்கனா ரனாவத்

கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  • Share this:
    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

    மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குப் பிறகு, வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ட்வீட்களை நடிகை கங்கனா ரனவத் வெளியிட்டு வருவதாகக் கூறி அவரது ட்விட்டர் கணக்கு, சில தினங்களுக்கு முன்பு நிரந்தரமாக முடக்கப்பட்டது. "வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் தவறான நடத்தை" குறித்த ட்விட்டர் கொள்கையை இந்த கணக்கு மீண்டும் மீண்டும் மீறியதாக ட்விட்டர் நிறுவனம் இது குறித்து தெரிவித்திருந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Kangana Ranaut (@kanganaranaut)






    இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளதாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்தால் அது மேலும் பயமுறுத்தும். அதனால், பயப்படக்கூடாது. வாருங்கள் மக்களே, கொரோனாவை அழிப்போம்” என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: