Home /News /entertainment /

நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிப்பு: மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிப்பு: மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நடிகை கங்கனா

நடிகை கங்கனா

விதிகளை மீறியதாக பாலிவுட் நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் படிக்கட்டு இருந்த இடத்தில் கழிப்பறைகள் கட்டப்படுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதற்கு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரிந்து கொள்வதற்காக 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு கங்கனா ரணாவத்துக்கு உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

    இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பின்னர் மும்பையை பாதுகாப்பாற்ற நகரமாக உணர்வதாக கங்கனா கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஆளும் கட்சியான சிவசேனா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள தனது ஆஃபிஸின் புகைப்படத்தைப் பதிவிட்ட கங்கனா, மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து விடுவார் என்று அச்சம் தெரிவித்திருந்தார். அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.



    இந்நிலையில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி கங்கனாவின் அலுவலகக் கட்டடத்தை மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bollywood, Kangana Ranaut

    அடுத்த செய்தி