பிரபல நடிகை கங்கனா ரணாவத் தென்னிந்திய சினிமா நடிகர்களை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதே நேரம் இந்தி திரையுலகை விமர்சித்து அவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட சினிமாக்கள் இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பிரபலம் அடைந்து வருகிறது. 2018-ல் வெளிவந்த யாஷ் நடித்த கே.ஜி.எஃப். திரைப்படம், ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த ஜீரோ படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது. அதற்கு முன்பு வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் தென்னிந்திய சினிமாவுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.
இதையும் படிங்க :
பிங்க் நிற புடவையில் பேக் போஸ் கொடுத்த அதுல்யா ரவி..
தற்போது விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் சைப் அலிகான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகின்றனர். மலையாளத்தில் மெகா ஹிட்டா அய்யப்பனும் கோஷியும் படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர்களை பாராட்டி இன்ஸ்டாகிராமில் நடிகை கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
தென்னிந்திய சினிமாக்களும், நடிகர்களும் வலுவாக இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. தென்னிந்திய படங்களும், நடிகர்களும் இந்திய கலாசாரத்தை பெரிதும் மதிக்கிறார்கள். அவர்கள் தங்களது குடும்பங்கள், உறவுகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். மேற்கத்திய கலாசார பாதிப்புக்கு ஆளாவதில்லை. நடிப்புத் தொழில் மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு இணையாக நம்மால் எதையும் குறிப்பிட முடியாது. அதே நேரம், இந்தி திரையுலகம் தங்களை சீரழித்து விடுவதற்கு தென்னிந்திய நடிகர்களும், படங்களும் அனுமதித்து விடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :
ஜிம் அவுட் ஃபிட்டில் ரசிக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..
தமிழில் 2008-ல் வெளிவந்த தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடித்திருப்பார். அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளிவந்த தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் கங்கனா நடித்திருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.