முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி 2 படத்தில் இணைந்த கங்கனா ரனாவத்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்திரமுகி 2 படத்தில் இணைந்த கங்கனா ரனாவத்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகை கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத்

தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் கங்கனா அறிமுகம் ஆனார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்திரமுகி 2 படத்தில் இந்தி முன்னணி நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.

இதனை இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தையும் பி.வாசு இயக்கி வருகீறார்.

2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

மேலும் படத்தில், ரவி மரியா, ராதிகா சரத்குமார், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பாகுபலி படங்களுக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் இன்று அறிவித்துள்ளது.

தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் கங்கனா அறிமுகம் ஆனார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார்.

Year Ender 2022 : ‘ஓ சொல்றியா’ஹிட் முதல் மயோசிடிஸ் நோய் வரை..! சமந்தா 2022 ரவுண்ட் அப்..

தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். சந்திரமுகி 2 படத்தில் வில்லியாக கங்கனா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Kangana Ranaut, Kollywood