ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Thalaivar 170: ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் இணையும் சிம்பு பட நடிகை!

Thalaivar 170: ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் இணையும் சிம்பு பட நடிகை!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

'தலைவர் 170' திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் வடிவேலு இருவரும் இணையவிருக்கிறார்களாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய திரைப்படமான 'தலைவர் 170' படத்தின் பூஜை, நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான தொடங்குவதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

  இந்நிலையில் தற்போதைய தகவலின்படி, 'தலைவர் 170' திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் வடிவேலு இருவரும் இணையவிருக்கிறார்களாம். அதோடு 'மாநாடு' பட புகழ் கல்யாணி பிரியதர்ஷனும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் ஹன்சிகா - வைரலாகும் வீடியோ

  'தலைவர் 170' திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமின்றி, பொதுவான சினிமா ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தும் ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என்று படத்துடன் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth