சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் - பகீர் பாலியல் புகார் சொன்ன நடிகை

பாலியல் தொல்லை தாங்கமுடியாமல்தான் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை கல்யாணி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

சினிமா மட்டுமல்ல சின்னத்திரையிலும் அட்ஜஸ்மெண்ட் செய்ய கேட்டார்கள் - பகீர் பாலியல் புகார் சொன்ன நடிகை
நடிகை கல்யாணி
  • Share this:
திரை உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் பலர் மீடூ(#MeToo)வில் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகாரில் இந்தி திரை உலகம் அதிர்ந்தது. நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு, தமிழ் திரையுலக நடிகர்கள், இயக்குநர்கள் மீது புகார் தெரிவித்தார். தற்போது இந்த வரிசையில் சேர்ந்துள்ளார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறிய பூர்ணிதா என்ற கல்யாணி.

பிரபுதேவாவுடன் 'அள்ளித்தந்த வானம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கல்யாணி, ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கல்யாணி. அதன் பின்னர் இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த கல்யாணி, அதன் பிறகு சினிமாவைவிட்டு விலகி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஊரடங்கால் வீட்டில் இருந்த அவர் சினிமாவில் இருந்து விலகியது ஏன் என்ற கேள்விக்கு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.


அதில், கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது தனது அம்மாவுக்கு போன் அழைப்பு வரும், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம், உங்கள் பெண்தான் கதாநாயகி எனக் கூறுவார்கள்.

அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைவதற்குள், ஒரு சின்ன 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும் என்று பச்சையாக கேட்பார்கள் என தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதைக்கேட்டு தனது அம்மா பட வாய்ப்பு வேண்டாம் என்று போனை துண்டித்து விடுவார் என்றும், அதன் பிறகு படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று தான் முடிவு செய்துவிட்டதாக கல்யாணி கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியபோது உயர் பொறுப்பில் இருந்தவர் தன்னை இரவில் 'பப்பு'க்கு அழைத்ததாக பகீர் குற்றச்சாட்டையும் கல்யாணி முன்வைத்துள்ளார். தான் மாலையில் 'காப்பி ஷாப்'பில் சந்திக்கலாம் என்றேன், அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்தே தன்னை தூக்கிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.குழந்தை நட்சித்திராமாக அறிமுகமாகி வெற்றி பெற்ற ஷாலினி, ஹன்சிகா போன்றோரின் பட்டியலில் தான் இணைய முடியாமல் போனதற்கு திரையுலகில் உள்ள பாலியல் தொந்தரவே காரணம் என நடிகை கல்யாணி கூறியுள்ள குற்றச்சாட்டால் மீண்டும் மீ டூ விவகாரம் சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டார்... நடிகை கொடுத்த புகாரில் பிரபல கேமராமேன் கைது
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading