Home /News /entertainment /

லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

குழந்தையுடன் நேரம் செலவிட்டு வரும் காஜல் அகர்வால், மகனுடனான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகை காஜல் அகர்வால் தனது குடும்ப படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். 

    அக்டோபர் 30, 2020 அன்று, காஜல் அகர்வால் மற்றும் கௌதம் கிட்சுலு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் தம்பதிகளுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நீல் எனப் பெயரிட்டுள்ளனர் காஜல் - கெளதம் தம்பதி.

    தற்போது குழந்தையுடன் நேரம் செலவிட்டு வரும் காஜல் அகர்வால், மகனுடனான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொள்கிறார். சமீபத்தில் பாகுபலி படத்தின் காட்சியை மறு உருவாக்கம் செய்த படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பாகுபலி படத்தில் சிவகாமி நெற்றியில் பாகுபலி பாதத்தை வைப்பதைப் போல, காஜல் அகர்வாலின் நெற்றியில் கால் வைத்திருந்தான் நீல்.

    இனி நாங்கள் மூவராகிறோம்... கர்ப்பத்தை அறிவித்த பிபாசா பாசு!




    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது கணவர் கெளதம் கிட்சுலு மகன் நீல் ஆகியோருடனான குடும்பப் படத்தை வெளியிட்டுள்ளார் காஜல். அதில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ’இந்த உலகத்திலேயே சிறந்த அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாங்கள் உங்களை காதலிக்கிறோம்’என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kajal Agarwal

    அடுத்த செய்தி