Kajal Aggarwal: நடிப்புக்கு முழுக்குப் போடுகிறாரா காஜல் அகர்வால்?

காஜல் அகர்வால்

தான் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை முடிப்பதில் கவனம் செலுத்தும் காஜல், தொற்று நிலைமை முடிவுக்கு வந்த பிறகு தனது படங்களின் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருக்கிறார்.

  • Share this:
    இந்திய சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிப்பை வழங்கிய நடிகை காஜல் அகர்வால், இறுதியாக திரைத்துறையில் இருந்து ஓய்வு எடுக்க முடிவெடுத்திருப்பதாக, சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுடனான தனது உரையாடலில் தெரிவித்துள்ளார்.

    அந்த உரையாடலில் பேசிய காஜல், தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக பகிர்ந்து கொண்டார், இதனால் சினிமாவில் தன்னால் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது என்ற அவர், எவ்வளவு காலம் படங்களில் நடிப்பேன் என தனக்கு தெரியாது என்றார். ஆனால் தனது கணவர் கெளதம் சினிமாவை விட்டு விலகுமாறு கேட்டுக் கொள்ளும் போது, தான் திரைத்துறையில் இருந்து விலகிவிடுவதாகவும் குறிப்பிட்டார். தற்போது, தான் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை முடிப்பதில் கவனம் செலுத்தும் காஜல், தொற்று நிலைமை முடிவுக்கு வந்த பிறகு தனது படங்களின் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருக்கிறார்.

    காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், தற்போதுள்ள தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக இதன் படப்பிடிப்புகள் தாமதமாகும். அதோடு 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: