என் வாழ்வின் காதல் நீ என தனது இன்ஸ்டாகிராமில் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமானார் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி,ஜீவா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன், தெலுங்கில் ராம்சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருடனும் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்தியிலும் வெற்றிக்கொடிக் கட்டிய காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காதலித்து வந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் காஜல் அகர்வால் - கவுதம் கிச்லு தம்பதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு நீல் கிச்சிலு என பெயரிட்டுள்ள காஜல் அகர்வால், கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகனுடன் இருக்கும் க்யூட் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல் அகர்வால் என் வாழ்வின் காதல் நீ என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.