• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’எப்போதும் அட்வைஸ் செய்யும் கதாபாத்திரம் வேண்டாம்’ - ஜோதிகா!

’எப்போதும் அட்வைஸ் செய்யும் கதாபாத்திரம் வேண்டாம்’ - ஜோதிகா!

ஜோதிகா - சூர்யா

ஜோதிகா - சூர்யா

தமிழ்நாட்டுப் பெண்கள் மிகவும் கண்ணியமானவர்கள். ஆனால், 80 சதவீதத்துக்கும் அதிகமான படங்களில், அவர்களைச் சரியாகக் காட்சிப்படுத்துவதில்லை.

  • Share this:
    எப்போதும் அட்வைஸ் செய்யும் ஒரு கதாபாத்திரமாக தான் தோன்ற விரும்பவில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உடன்பிறப்பே'. இது ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் 50-வது படமாகும். ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

    இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு, இணைய நேர்க்காணல்களில் கலந்துக் கொண்டு வருகிறார் ஜோதிகா. அப்போது தொடர்ச்சியாக சமூக கருத்துள்ள படங்களில் நடிக்கிறீர்கள்... வேறு விதமான கதைகளில் நடிப்பீர்களா? எனக் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஜோதிகா, ”உண்மையில் நான் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், தற்போது ஒரு படத்தைத் தேர்வு செய்யும்போது எப்போதும் என் குழந்தைகளை மனதில் வைத்துக் கொள்கிறேன். அவர்களுக்குத்தான் என்னுடைய முன்னுரிமை. எப்போதும் அட்வைஸ் செய்யும் ஒரு கதாபாத்திரமாக நான் இருக்க விரும்பவில்லை.

    தமிழ்நாட்டுப் பெண்கள் மிகவும் கண்ணியமானவர்கள். ஆனால், 80 சதவீதத்துக்கும் அதிகமான படங்களில், அவர்களைச் சரியாகக் காட்சிப்படுத்துவதில்லை. ஆண்கள் தங்களைத் திரையில் காணும்போது, அவர்கள் சக்திவாய்ந்த கதாபாத்திரங்களாக, காதல் முதல் ஆக்‌ஷன் வரை அனைத்தையும் வெல்லக்கூடிய கதாபாத்திரங்களாகக் காட்டப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: